தேவயாணி கணவருக்கு வில்லனாக வந்த பரத்..?


தேவயாணி கணவருக்கு வில்லனாக வந்த பரத்..?

விக்ரம், சமந்தா நடித்த ’10 எண்றதுக்குள்ள’ படத்தை இயக்கியவர் விஜய்மில்டன். கடந்த ஆண்டு ரிலீஸான இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

எனவே, டி. ராஜேந்தரை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார் விஜய்மில்டன். இதற்கான பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நீடித்து வந்தது. ஆனால் டி. ஆர் சம்பளத்தை அதிகமாக கேட்கவே, பிரபல இயக்குனரும் நடிகை  தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் நடிக்கிறாராம்.

இவர் சந்தானம் நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்காலாம்.

இதில் ராஜகுமாரனுக்கு வில்லனாக பரத் நடிக்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் எனத் தெரிகிறது.