பரத்தும் சிக்குகிறார்! தொடர்கிறது பேய் அட்டகாசம்..


பரத்தும் சிக்குகிறார்! தொடர்கிறது பேய் அட்டகாசம்..

தமிழ் ரசிகர்களை பயமுறுத்தி ரசிக்க வைத்த பேய் படங்கள் வரிசை கட்டி வந்தன. சரி… பேய் சீசன் முடிஞ்சிபோச்சி.. இனி தெறிக்கவிடும் சீசன் என்று நினைத்தால் மீண்டும் பேய் படங்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி இணைந்து நடித்துள்ள ‘சவுகார்பேட்டை’ படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இவர்களுடன் சரவணன், சுமன், சிங்கம்புலி, வடிவுக்கரசி, பவர் ஸ்டார் சீனிவாசன், மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜான் பீட்டர் இசையமைத்துள்ள இப்படத்தை வடிவுடையான் இயக்கியிருக்கிறார்.

பேய் படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தையும் வாங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் வியாபாரம் மிகவும் திருப்திகரமாக வந்துள்ளதால் சவுகார் பேட்டை இயக்குனருக்கு கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார்களாம்.

தற்போது பரத் நடிக்க புதிய பேய் படத்தை இயக்கவிருக்கிறாரம் இயக்குனர் வடிவுடையான். ‘பொட்டு’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பரத்துடன் சரவணன், கருணாஸ், சுமன், சிங்கம்புலி, ஊர்வசி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முன்னாள் நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் இசையமைக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.