பாலாவுக்கு கல்தா… ‘குற்றப்பரம்பரை’க்கு பூஜை போட்ட பாராதிராஜா..!


பாலாவுக்கு கல்தா… ‘குற்றப்பரம்பரை’க்கு பூஜை போட்ட பாராதிராஜா..!

சர்ச்சைகள் பல நிறைந்த ‘குற்றப்பரம்பரை’ படத்தை பாரதிராஜா இயக்கவுள்ளதாக செய்திகள் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

பின்னர் பாலா இயக்குவார் என்றும் இதற்கான கதையை வேல ராமமூர்த்தி எழுதி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் பாரதிராஜா இயக்குவார் என்றும் இது பேராசிரியர் இரத்தினகுமார் எழுதிய கதை என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் பாராதிராஜா என்ன நினைத்தாரோ, திடீரென ‘குற்றப்பரம்பரை’ படத்தின் துவக்க விழாவை தடபுடலாக உசிலம்பட்டியில் ஆரம்பித்து விட்டார்.

உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூரில் உள்ள வீர தியாகிகள் நினைவிடத்தில் இதன் பூஜை விமரிசையாக நடைபெற்றது.

இயக்குனர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சுசீந்திரன், பாண்டிராஜ், பொன்ராம், எழில், SS ஸ்டான்லி, சரவணசுப்பையா, பாடலாசிரியர்கள் நா.முத்துகுமார், கபிலன் வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.

பின்குறிப்பு…. குற்றப் பரம்பரை, சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென மதித்து, நிராயுத பாணியாக போராடிய இந்திய மக்கள் மீது ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிகளின் மரண போராட்டம்தான் இப்படத்தின் கதைகளம் என்பது குறிப்பிடத்தக்கது.