தோனிக்கு அம்மாவான விஜய்-சூர்யாவின் ஹீரோயின்..!


தோனிக்கு அம்மாவான விஜய்-சூர்யாவின் ஹீரோயின்..!

தன் அழகான நடிப்பாலும், தடித்த உதடுகளாலும் ரசிகர்களை கிறங்கடித்தவர் பூமிகா.

இவர் விஜய்யின் ஜோடியாக பத்ரி படத்திலும் சூர்யாவுக்கு ஜோடியாக ஜில்லுனு ஒரு காதல் படத்திலும் நடித்தவர்.

திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனவர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இவருக்கு தற்போது 37 வயதாகிறது.

இந்நிலையில் தோனிக்கு அம்மாவாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

நீரஜ் பாண்டே இயக்கத்தில் உருவாகவுள்ள கிரிக்கெட் நட்சத்திரம் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில்தான் அம்மாவாக நடிக்கிறார்.

‘M.S. Dhoni – The Untold Story’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தோனியாக சுசந்த் சிங் ராஜ்புட் நடிக்கிறார்.

சுரேஷ் ரெய்னா ஆக ராம்சரண் தேஜா, விராட் கோலியாக பவஹத்கான், யுவராஜ் சிங் ஆக ஹெரி டாங்கிரி, ஜான் ஆப்ரஹாம் ஆக ஜான் ஆப்ரஹாம் நடிக்கிறார்கள்.

செப்டம்பர் 2ஆம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.