ரஜினிக்கு இப்படியொரு மாஸ்..? ஆச்சரியத்தில் விஜய்-அஜித் ரசிகர்கள்..!


ரஜினிக்கு இப்படியொரு மாஸ்..? ஆச்சரியத்தில் விஜய்-அஜித் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் அவ்வப்போது நடந்து வரும் அஜித், விஜய் ரசிகர்களின் சண்டை நாம் அனைவரும் அறிந்ததே.

பேஸ்புக், ட்விட்டர் போன்ற வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களால் மோதி வருகின்றனர்.

இதற்கு முன் ரஜினி, கமல் ரசிகர்களிடையே இதுபோன்ற சில மோதல்கள் இருந்து வந்தது.

ஆனால் இப்போது அவர்களது ரசிகர்கள் 40 வயதை கடந்துவிட்டதால், இனி மாஸ் ரசிகர்களால் காட்டமுடியாது என மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கூறிவந்தனர்.

இந்நிலையில், ரஜினி நடித்து வரும் கபாலி படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.

இப்போஸ்டர் தற்போது சத்யம் சினிமாஸின் முகப்பில் மிகப்பிரம்மாண்டமான முறையில் அலங்கரித்து வருகிறது.

இதையும் விட்டு வைக்காத, ரஜினி ரசிகர்கள் அந்த திரையரங்கம் முன் கூடி போஸ்டரை கொண்டாடி வருகின்றனர். அந்த புகைப்படங்களையும் இணையங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதனையறிந்த விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துப் போய் இருக்கிறார்களாம்.