அஜித்துக்கு சிஸ்டர் நானா? ஹய்யோ.. ஹய்யோ… பிந்து மாதவி


அஜித்துக்கு சிஸ்டர் நானா? ஹய்யோ.. ஹய்யோ… பிந்து மாதவி

‘வெப்பம்’, ‘கழுகு’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தமிழுக்கு எண் 1 அழுத்தவும்’ உள்ளிட்ட  படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கண்களால் கைது செய்து வருபவர் பிந்து மாதவி.

சமீபத்தில் இவரை பற்றிய ஒரு செய்தி காட்டுத் தீயாக பரவி இருந்தது. அதாவது பிந்து மாதவி உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரவியிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிந்து மாதவி “தன்னை சீக்கிரம் கொலை செய்து விடாதீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் மற்றொரு செய்தியும் கடந்த சில நாட்களாக வெளிவருகிறது. சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் அஜித்தின் தங்கை கேரக்டரில் பிந்துமாதவி நடிக்கவிருக்கிறார். படத்தில் அஜித் வில்லனாக பாலிவுட் நடிகர் கபீர் கமிட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தில்… “அஜித்தின் சிஸ்டர் கேரக்டரில் நானா? இல்லை  ஆனால், அப்படத்தில் நடிப்பது குறித்து விரைவில் நானே அறிவிப்பேன்” என்று தெரிவித்திருக்கிறார் பிந்து மாதவி.

தற்போது சவாலே ‘சமாளி’, ‘மாப்ள சிங்கம்’ மற்றும் ‘றைக்கூ’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.