பாபி சிம்ஹா-நிக்கி கல்ராணி நடிக்கும் ‘கோ பார்ட் 2′


பாபி சிம்ஹா-நிக்கி கல்ராணி நடிக்கும் ‘கோ பார்ட் 2′

சமீப காலங்களில் ரீமேக் படங்களுக்கும், தொடர்கதை அமைப்பு படங்கள் எனக் கூறப்படும் ‘Sequel’ படங்களும் திரையுலகத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா, பியா உள்ளிட்டோர் நடித்த ‘கோ’ படத்தை கே.வி. ஆனந்த் இயக்கியிருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் பாடல்கள் செம ஹிட்டானது. படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது.  இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முன்வந்துள்ளனர் ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தினர்.

இதுகுறித்து RS இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறியதாவது…

“எங்களது வெற்றிபடமான ‘கோ’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. விஷ்ணுவர்தன், சக்ரி டோலெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குனராய் பணி புரிந்த சரத் அவர்களிடம் கதையை கேட்டோம். உடனே இப்படத்தையும் எங்கள் நிறுவனமே தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ஒரு படத்தின் ‘Sequel’ என்றால் அதே குழு மற்றும் நடிகர்கள் நடிக்க வேண்டும் என்றில்லாமல் அந்தக் கதை அந்த தலைப்புக்கு ஏற்றவாறு இருக்கவேண்டும் என யோசித்தோம். அதன் விளைவே ‘கோ-2’ விரைவில் தயாராகவுள்ளது.

இந்த கதாபாத்திரத்தின் வலிமைக்கு பாபி சிம்ஹா கனகச்சிதமாய் பொருந்தியுள்ளார். இவருக்கு ஜோடியாக ‘டார்லிங்’ புகழ் நிக்கி கல்ராணி நடிக்கிறார். மேலும், பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். ‘கோ’ திரைப்படத்திற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு இப்படத்தையும் ஆதரிக்க வேண்டுகிறோம்” என்றார்.