திருப்பதியில் பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன் திருமணம் நடைபெற்றது..!


திருப்பதியில் பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன் திருமணம் நடைபெற்றது..!

சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா, ஜிகர்தண்டா வில்லனாக நடித்து, தேசிய விருதை பெற்றார்.

தற்போது கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள இறைவி படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இதனிடையில் ‘உறுமீன்’ படத்தில் நடித்தபோது ரேஷ்மிமேனனுக்கும் இவருக்கும் இடையில் காதல் உருவானது.

அதை தொடர்ந்து கடந்த நவம்பர் 8ஆம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இன்று இவர்களின் காதல் திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. இதில் கார்த்திக் சுப்புராஜ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

திருமண ஜோடிகளை சினிகாஃபி சார்பாக வாழ்த்துகிறோம்.