பாபி சிம்ஹா ஜாக்கிரதை… நடிக்காத படத்தில் ஹீரோ வேஷமா?


பாபி சிம்ஹா ஜாக்கிரதை… நடிக்காத படத்தில் ஹீரோ வேஷமா?

ஜிகர்தண்டா படத்தில் கிடைத்த தேசிய விருதை தொடர்ந்து தற்போது அரை டஜன் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் பாபி சிம்ஹா.

ஓரிரு தினங்களுக்கு இவரது நடிப்பில் ‘கோ 2′ படம் வெளியானது.

இதனைத் தொடர்ந்து, ‘மீரா ஜாக்கிரதை’ என்னும் படத்தில் இவர் நடித்துள்ளதாக கூறிய விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இப்படம் மே 27ம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாபி சிம்ஹா கூறியதாவது…

கடந்த சில நாட்களாக எனக்கு யார் என்றே தெரியாத தயாரிப்பாளர் படத்தில் (‘மீரா ஜாக்கிரதை’) நான் நடித்துள்ளதாக விளம்பரம் வருகின்றது.

இப்படத்தில் நான் நடிக்கவும் இல்லை. டப்பிங் பேசவும் இல்லை. நான் இதற்கு முன்பு நடித்த ‘உறுமீன்’ படத்தின் ஸ்டில்களை அதில் பயன்படுத்தியுள்ளனர்.

அதில் நடித்த நாயகி மோனிகா யார் என்றே எனக்குத் தெரியாது. எனவே என் மீது களங்கம் ஏற்படுத்தும் அப்படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன்” என்றார்.

ஆனால் படத்தை இயக்கிய கேசவன் இது பாபி சிம்ஹா நடித்த படம்தான் என்று உறுதியாக கூறி வருகிறார்.

இதற்கு முன்பே பாபி சிம்ஹா நடித்த சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படமும இதுபோன்ற வேறொரு பிரச்சினையில் சிக்கியது.

எனவே பாபி சிம்ஹாதான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் போல.