இவருக்கும் ரஜினி ஆசை முளைச்சாச்சா?? அட ‘பாபி’களா!!


இவருக்கும் ரஜினி ஆசை முளைச்சாச்சா?? அட ‘பாபி’களா!!

சில வருடங்கள் முன்பு நளினிகாந்த் என்றொரு நடிகர் “காந்த்” என்ற வார்த்தைகளை தன் பெயருடன் ஒட்டிவைத்துக்கொண்டு சில படங்களில் நடித்தும் பார்த்தார்.

ஆனால், ரஜினி என்ற மிகப்பெரிய மலைக்கு முன்னே காணாமல் போனார். தற்போது அவர் நிலை என்ன என்பதே தெரியவில்லை…. அதேபோல் இன்றுள்ள ஹீரோக்கள் சிலருக்கு ரெண்டு படம் பாக்ஸ் ஆபீஸ் பார்த்ததும் அடுத்து ரஜினி ஆசை ரெக்கை கட்டிக்கொள்ளும்.

நல்லாத்தானே இருந்தாப்ல? இவரது படங்களும் பாக்ஸ் அப்படியொண்ணும் ஆபிஸும் பார்க்கவுமில்லை. இவருக்கு ஏன் இந்த ரஜினி ஆசை??அடப்’பாவி’களா? என்பதற்குப் பதில் அட ‘பாபி’களா?? என்று ஆச்சர்யப்பட்டுக்கொள்ளுங்கள். அதேதான். அவரேதான். பாபி சிம்ஹாவேதான்.

இவர் நடித்து வெளியான உறுமீன் படத்தில் 3 கேரக்டரில் நடித்துள்ளார். இதில் வரும் செழியன், செல்வம், ராஜ சிம்மன் என்ற மூன்று கேரக்டர்களிலும் ரஜினியின் சாயலை பின்பற்றிப் பார்த்திருக்கிறார்.

செழியன் கேரக்டர் காளி கேரெக்டரையும், செல்வம் கேரெக்டர் தில்லு முல்லு கேரெக்டரையும் நமக்கு நினைவுபடுத்துகிறது. மேலும் மன்னர் ராஜ சிம்மன் கேரெக்டர் கோச்சடையான் கேரக்டரை நினைவு’படுத்த’ தவறவில்லை.

“முகத்திலும் பேச்சிலும் ரஜினியின் சாயல் கொண்டு வந்துவிட்டால் போதுமா?? தனக்கென ஒரு பாணி வேண்டாமா?? இதுவே தொடர்ந்தால் பாபி சிம்ஹாவின் அடையாளம் என்னாவது? ஏற்கெனவே நான்தான் அடுத்த ரஜினி என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள் போதாதா?? இன்னும் எத்தனை பேர்தான் ரஜினியாகப் பார்ப்பீங்க?? ”

“எல்லாருக்கும் ரஜினியாக மாற ஆசைத்தான். ஆனால் ரஜினி ஒருவருக்கே அவரின் வலி தெரியும். இந்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர அவர் பட்ட கஷ்ட நஷ்டங்கள் அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்”.

அதனால் பாபிஜி, “ரஜினி ஆசையை மூட்டை கட்டி வச்சிட்டு
சொந்த அடையாளத்துக்கு முயற்சி பண்ணுங்க ஜி”.