பாபி சிம்ஹா- கீர்த்தியின் ‘பாம்பு சட்டை’ முடிவுக்கு வந்தது!


பாபி சிம்ஹா- கீர்த்தியின்  ‘பாம்பு சட்டை’ முடிவுக்கு வந்தது!

‘தேசிய விருது நாயகன்’ பாபி சிம்ஹா மற்றும் ‘ரஜினிமுருகன்’ நாயகி கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘பாம்பு சட்டை’. ஆடம்தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தாமிரபரணி பானு, சார்லி, மொட்டை ராஜேந்திரன், ஆர்.வி உதயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரின் ‘மேஜிக் ஃப்ரேம்ஸ்’ நிறுவனம் மற்றும் நடிகர் மனோபாலாவின் ‘மனோபாலா பிக்சர் ஹவுஸ்’ இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் சில போட்டோகளை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸரை விரைவில் வெளியிடவுள்ளனர். ‘பாம்பு சட்டை’ படத்தின் இயக்குனர் கூறியதாவது… “மிகவும் குறுகிய காலத்தில் இப்படத்தை எடுத்து முடித்துள்ளேன். இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் என்னுடைய நன்றி. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. படம் மிக அருமையாக அனைவருக்கும் பிடிக்கும் வகையில் வந்துள்ளது. விரைவில் இந்த ‘பாம்பு சட்டை’யின் பர்ஸ்ட் லுக் சீறி வரும்” என்றார்.