விஜய்யுடன் மோதும் பாபி சிம்ஹா; ஆச்சரியத்தில் கோலிவுட்!


விஜய்யுடன் மோதும் பாபி சிம்ஹா; ஆச்சரியத்தில் கோலிவுட்!

முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் வெளியாகும் நாளில் வளர்ந்து வரும் நாயகர்கள் தங்கள் படத்தை வெளியிட மாட்டார்கள். அதற்கு காரணம்… டாப் ஹீரோக்கள் படங்களுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும். மேலும் சிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை.

சமீபத்தில் ‘பாபநாசம்’ படம் வெளியானபோது அருள்நிதியின் படம் ஒதுங்கிகொண்டது தங்களுக்கு நினைவிருக்கலாம். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியன்று விஜய்யின் ‘புலி’ வெளியாகவுள்ளது. அதே நாளில் விஷாலின் பாயும் புலி வெளியாகவிருந்தது. ஆனால் அதற்கு முன்பே செப்டம்பர் 4ஆம் தேதியே படத்தை வெளியிடவுள்ளார். போட்டியிருந்து விஷால் விலகி கொள்ள தற்போது இந்த போட்டியில் பாபி சிம்ஹா இணைந்துள்ளார்.

விஜய்யின் கேரியரில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள ‘புலி’ படத்துடன் பாபி சிம்ஹா நடித்துள்ள ‘கோ-2’ படம் மோதவிருக்கிறது. இப்படத்தில் பாபி சிம்ஹாவுடன் முக்கிய கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் தேசிய விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நிக்கி கல்ராணி, பாலா சரவணன் நடித்துள்ள இப்படதை அறிமுக இயக்குனர் சரத் இயக்கியுள்ளார். ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் தயாரித்துள்ளது.