ஹீரோவாக வலம் வந்தவர் வில்லனாகிறார்?? என்னாச்சி பாபி சிம்ஹாவுக்கு??


ஹீரோவாக வலம் வந்தவர் வில்லனாகிறார்?? என்னாச்சி பாபி சிம்ஹாவுக்கு??

‘ஜிகர்தண்டா’ படத்துல அசால்ட் சேது என்ற வில்லனா நடிச்சி அசல்டா சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கினவரு பாபி சிம்ஹா. நிவின் பாலி, நஸ்ரியா நடித்த ‘நேரம்’ படத்துல வட்டி ராஜா வேஷத்துல கலக்கியிருந்தவர்தான் இந்த பாபி.

இப்போது முழுநேர ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார் இவர். கடந்த வாரம் இவர் நடித்த ‘உறுமீன்’ படம் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் இவரது கைவசம் பாம்புச்சட்டை, இறைவி, கோ 2, மெட்ரோ, வல்லவனுக்கு வல்லவன், கவலை வேண்டாம், அர்ஜுன், திவ்யா மற்றும் கார்த்தி (பெங்களூர் டேஸ் மலையாள பட ரீமேக்) ஆகிய அரை டஜன் படங்கள் உள்ளன.

என்னதான் ஹீரோவாக அரிதாரம் பூசினாலும் இப்போது மீண்டும் வில்லனாக நடிக்கவிருக்கிறாராம் பாபி. ‘நேரம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில்தான் வில்லன் வேடம் ஏற்கிறார் இவர். அதானே அந்த வட்டிராஜா கேரக்டருக்கு செம பொருத்தமான ஆளு ஆச்சே இவர்.

சந்தீப் கிஷன் மற்றும் அனிஷா அம்ரோஸ் நடிக்கும் இப்படத்திற்கு ‘123’ என்று பெயரிட்டுள்ளனர். அணில் கன்னேகந்தி இயக்க பிக்சல் ட்ரீம்ஸ் தயாரிக்கிறது.

இன்னும் சில நாட்களில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.