ஏ சர்ட்டிபிகேட் கிடைச்சாலும் ஓகேதான்… போராடி பெற்ற பாபி சிம்ஹா..!


ஏ சர்ட்டிபிகேட் கிடைச்சாலும் ஓகேதான்… போராடி பெற்ற பாபி சிம்ஹா..!

ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு மீண்டும் வில்லனாக பாபி சிம்ஹா நடித்துள்ள படம் மெட்ரோ.

இவருடன் சிரிஷ், சென்ட்ராயன் உள்ளிட்ட முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

தொடர் வழிப்பறி கொள்ளைகளை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

இப்படத்தை ‘ஆள்’ புகழ் ஆனந்த் கிருஷ்ணன் இயக்க ஜோஹன் இசையமைத்துள்ளார்.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தணிக்கைக்கு இப்படத்தை அனுப்பி வைத்தனர்.

ஆனால் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதால், தணிக்கை குழுவினர் சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டனர்.

இந்நிலையில் மறுதணிக்கைக்கு இப்படக்குழுவினர் செல்லவே, தற்போது ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது.

எனவே, இந்த மெட்ரோ, ஜூன் மாதம் திரையரங்குகளில் ஓட இருக்கிறது.