பூலோகம் தரும் பூரிப்பில் ஜெயம் ரவி… த்ரிஷாவும் ஹேப்பி அண்ணாச்சி!


பூலோகம் தரும் பூரிப்பில் ஜெயம் ரவி… த்ரிஷாவும் ஹேப்பி அண்ணாச்சி!

ஜெயம் ரவியின் நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் ரோமியோ ஜூலியட், சகலகலா வல்லவன் அப்பாடக்கர், தனி ஒருவன் ஆகிய 3 படங்கள் வெளியாகியுள்ளது. இதில் தனி ஒருவன் தந்த தாறுமாறான வெற்றி ஜெயம் ரவியை உச்சத்தில் கொண்டு நிறுத்தியுள்ளது.

எனவே தமிழ் சினிமாவில் அவரது படங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம். அப்போ இதான் சரியான டைம்மாக இருக்கும் என்று எண்ணி நீ….ண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த ‘பூலோகம்’ படத்தை வெளியிட இருக்கின்றனர் படக்குழுவினர்.

அதன் முதற்கட்டமாக இப்படத்தின் ட்ரைலரை இன்று மாலை வெளியிட்டு படத்தை கிறிஸ்மஸ் ஸ்பெஷலாக டிசம்பர் 24ஆம் தேதி வெளியிடவிருக்கின்றனர். இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜெயா டிவி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ படத்தை தொடர்ந்து ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்துள்ள இப்படத்தை கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவியுடன் த்ரிஷா, பிரகாஷ் ராஜ், நாராயண், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இசை ஸ்ரீகாந்த் தேவா