பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் : கதம் கதம், ராஜதந்திரம், இவனுக்கு தண்ணில கண்டம், மகாபலிபுரம்


பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் : கதம் கதம், ராஜதந்திரம், இவனுக்கு தண்ணில கண்டம், மகாபலிபுரம்

மார்ச் மாதம் பள்ளிகளின் தேர்வு காலம். அப்படியிருந்தும்,  கடந்த வாரம் மார்ச் 13ஆம் தேதி 13 படங்கள் ரிலீஸானது. இந்த வாரம் வெளியாகவிருந்த ஒன்றிரண்டு படங்கள் கூட கடந்த வாரமே வெளியானது.

பெரிய நட்சத்திரங்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருந்தபோதிலும் வெளியான சில படங்கள் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருந்து. கதம் கதம், ராஜதந்திரம், இவனுக்கு தண்ணில கண்டம், மகாபலிபுரம் போன்ற படங்கள் மிகவும் முக்கிய படங்களாக கருதப்பட்டன.

ராஜதந்திரம் படத்தில் வீரா, சிவா, அஜய் பிரசாத், ரெஜினா, ஆடுகளம் நரேன், இளவரசு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கதம் கதம் படத்தில் நட்டி, நந்தா, ஷனம் ஷெட்டி, சரிகா, நிழல்கள் ரவி, சிங்கமுத்து, கிரேன் மனோகர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இவனுக்கு தண்ணில கண்டம் படத்தில் சின்னத்திரை நடிகர் தீபக், நேகா, சென்ட்ராயன், குமரவேல், நான்கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மகாபலிபுரம் படத்தில் கருணாகரன், கார்த்திக், ரமேஷ் திலக், வெற்றி, விநாயக் மணி, அங்கனா ராய், விருத்திகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தற்போது இந்த நான்கு படங்களின் முதல் 3 நாட்களின், சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரிய வந்துள்ளது.

1) ராஜதந்திரம் ரூ 17 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.

2) மகாபலிபுரம் ரூ 16 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.

3) இவனுக்கு தண்ணில கண்டம் படம் ரூ 15 லட்சம் வரையும்

4) கதம் கதம் படம் ரூ 10 லட்சம் வசூல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.