பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் – 36 வயதினிலே & புறம்போக்கு


பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் – 36 வயதினிலே & புறம்போக்கு

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். தங்கள் அபிமான நட்சத்திரங்களின் படங்களை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். அன்றைய அதே பரபரப்பு பாக்ஸ் ஆபிஸில் யார் முன்னிலை என்பதை தெரிந்து கொள்வதிலும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில் கடந்த வாரம் வெளியான ஜோதிகாவின் ரீஎன்ட்ரி படமான ’36 வயதினிலே’ மற்றும் ஆர்யா-ஷாம்-விஜய்சேதுபதி-கார்த்திகா நடித்த ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என இரண்டு படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. அதிலும் ’36 வயதினிலே’ படம் பெண்களிடம் அமோக வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.  புறம்போக்கு படத்தில் மூன்று ஹீரோக்கள் இருந்தபோதிலும்  எந்த கமர்ஷியல் மசாலா ஐட்டங்களும் இல்லை. இந்த இரண்டு படங்களும் நல்ல கதையம்சம் கூடிய உணர்வுபூர்வமான படங்களே.

தற்போது இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட் வெளிவந்துள்ளது. ’புறம்போக்கு’ ரூ 72 லட்சம் வசூலையும், ’36 வயதினிலே’ ரூ 55 லட்சம் வசூலையும் இதுவரை கொடுத்துள்ளது. இரண்டு படங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு இருப்பதால் வரும் நாட்களில் இவை  இன்னும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.