இறுதிச்சுற்று Vs அரண்மனை 2… எது பேய் ஹிட்டு..?


இறுதிச்சுற்று Vs அரண்மனை 2… எது பேய் ஹிட்டு..?

கடந்த ஜனவரி 29ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் அரண்மனை 2, இறுதிச்சுற்று, நனையாதே மழையே மற்றும் நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க ஆகிய நான்கு படங்கள் வெளியானது.

இதில் மாதவனின் இறுதிச்சுற்று மற்றும் சித்தார்த்தின் அரண்மனை 2 ஆகிய படங்கள் இடையே பலத்த போட்டி இருந்து வருகிறது.

சுதா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங், நாசர் உள்ளிட்டோர் நடித்த பாக்ஸிங் படமான இறுதிச்சுற்று படத்திற்கு எவரும் எதிர்பாராத வகையில் பெரும் வசூலும் நல்ல விமர்சனங்களும் கிடைத்துள்ளன. இப்படம் தரமான படம் என்பதால் வசூலில் பல்வேறு சாதனைகளை படைக்கும் என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.

இதில் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 2 படம் பி அண்ட் சி சென்டர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் எனத் தெரிகிறது. எனவே அரண்மனை 3 படம் வந்தாலும் ஆச்சரியப்படுவற்கில்லை.