பாக்ஸ் ஆபிஸ் : 10 எண்றதுக்குள்ள & நானும் ரௌடிதான்!


பாக்ஸ் ஆபிஸ் : 10 எண்றதுக்குள்ள & நானும் ரௌடிதான்!

கடந்த அக். 21ஆம் தேதி விக்ரம் நடித்த ‘10 எண்றதுக்குள்ள’ படம் வெளியானது. விஜய் மில்டன் இயக்கிய இப்படத்தில் சமந்தா, பசுபதி உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைத்திருந்தார். ஏ. ஆர். முருகதாஸ் தயாரித்திருந்தார்.

இதே நாளில் தனுஷ் தயாரித்து விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரௌடிதான்’ படமும் வெளியானது. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் நயன்தாரா, ராதிகா, பார்த்திபன், ஆர். ஜே. பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசைமைதிருந்தார்.

இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள போதிலும் ‘நானும் ரௌடிதான்’ படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. தற்போது 5 நாட்களை கடந்துள்ள நிலையில் சென்னை வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது.

10 எண்றதுக்குள்ள : ரூ. 1.65 கோடியை வசூலித்துள்ளது.

நானும் ரௌடிதான் : ரூ. 1.44 கோடியை வசூலித்துள்ளது.

விஜய்சேதுபதி வெறும் 20 லட்சம் ரூபாய் வித்தியாசத்தில் மட்டுமே பின் தங்கி இருக்கிறார். இனிவரும் நாட்களில் இதில் நிச்சயம் வேறுபாடு காணப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முந்தைய வாரம் வெளியான அனுஷ்காவின் ‘ருத்ரமாதேவி’ இரண்டாவது வாரத்தில் ரூ. 15 லட்சத்தை மட்டுமே வசூலித்துள்ளது. மொத்தத்தில் இப்படம் இதுவரை ரூ. 1 கோடியே 20 லட்சத்தை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.