பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்; வாலு, VSOP எது பர்ஸ்ட்?


பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்; வாலு, VSOP எது பர்ஸ்ட்?

கடந்த வாரம் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக இரு முக்கிய படங்கள் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிம்பு நடித்த ‘வாலு’ படம் வெளியானது. இதில் சந்தானம், ஹன்சிகா, விடிவி கணேஷ், நரேன், ஸ்ரீரஞ்சனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமன் இசையமைக்க அறிமுக இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியிருந்தார்.

அதுபோல் ஆர்யா தயாரித்து நடித்த ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ (VSOP) படமும் ரிஸீஸானது. இதில் சந்தானம், தமன்னா, பானு, வித்யூலேகா, சுவாமிநாதன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இமான் இசையமைக்க எம். ராஜேஷ் இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களிலும் சந்தானம் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த இரு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிய வந்துள்ளது.

இதில் சிம்புவின் ‘வாலு’ வெளியாகி மூன்று நாட்களில் ரூ 1 கோடியை தாண்டியுள்ளது. ஆர்யாவின் VSOP, ரூ. 95 லட்சத்தை மட்டுமே வசூல் செய்துள்ளது. தற்போது உள்ள நிலவரப்படி சிம்புவே முதலிடத்தில் உள்ளார்.