நகுல்-ஸ்ருதி திருமணம் இன்று நடைபெற்றது..!


நகுல்-ஸ்ருதி திருமணம் இன்று நடைபெற்றது..!

‘பாய்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தேவயானியின் தம்பி நகுல். இப்படத்தை தொடர்ந்து ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’, ‘வல்லினம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் நாரதர் படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நகுலுக்கும் ஸ்ருதி என்பவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்று காலை திருமணம் நடைபெற்றது. சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

இவர்களின் திருமண விழாவில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் தாணு மற்றும் திரையுலக பிரபலங்க்ள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார்.