விஜய் பட ரீமேக்கில் இணைந்த விஷால்-கார்த்தியின் ஹீரோயின்..!


விஜய் பட ரீமேக்கில் இணைந்த விஷால்-கார்த்தியின் ஹீரோயின்..!

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் கத்தி.

லைகா மற்றும் ராம்சரண் தயாரிப்பில் இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது.

சிரஞ்சீவியின் 150வது படமாக உருவாகவுள்ள இப்படத்தை வி.வி.விநாயக் இயக்குகிறார். இதில் நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என கூறப்படுகிறது.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இந்நிலையில் இதில் இடம் பெறவுள்ள முக்கிய கேரக்டரில் நடிக்க கேத்ரீன் தெரசா ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

தமிழில், கார்த்தியின் ‘மெட்ராஸ்’, விஷாலின் ‘கதகளி’ ஆகிய படங்களில் நாயகியாக கேத்ரீன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.