கண்ணா…. நெட்ல வேலை இருந்தா 11 மணிக்குள்ள முடிச்சிடுங்க… கபாலி டீசர் குறித்து பிரபலங்கள்…!


கண்ணா…. நெட்ல வேலை இருந்தா 11 மணிக்குள்ள முடிச்சிடுங்க… கபாலி டீசர் குறித்து பிரபலங்கள்…!

நாளை கபாலி தினத்தை முன்னிட்டு… ஓ சாரி மன்னிக்கவும். கபாலி டீசர் பத்தி பேசி பேசியே இப்படி ஆச்சு. நாளை உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, ரஜினியின் கபாலி டீசர் வெளியாகிறது.

இதனை வரவேற்க ரசிகர்கள் மட்டுமல்ல, திரையுலக பிரபலங்களும் தயாராகி வருகின்றனர்.

கபாலி திருநாளாகவே அவர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர். எனவே தங்கள் சமூக வலைத்தளப்பங்களில் இதுகுறித்து பகிர்ந்து வருகின்றனர்.

அனிருத் யூட்யுப் எச்சரிக்கை விடுவது போல கூறியிருக்கிறார்.

“தலைவர் வர்றார். யூடியுப் வெடித்துவிடும் எனத் தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளதாவது….

‘என்னோட போன், டிவி, லேப்டாப், நெட் இப்படி எல்லாத்துலயும் ‘கபாலி’ டீசர் நான் ஸ்டாப்பாக ஓடிக் கொண்டிருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தீவிர கமல் ரசிகர் என அடிக்கடி கூறிவரும் ரோபோ சங்கர் தன்னுடைய ட்விட்டரில்….

‘நாளை கபாலி டீசருக்காக என்னுடைய சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டேன். தலைவா நீ வா.. வெறித்தனமாக வெயிட் பண்றேன். என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பாலாஜி மோகன் கூறியுள்ளதாவது…

நெட்ல ஏதாவது வேலை இருந்தா, நாளை காலை 11 மணிக்கு முன்னதாக முடித்து விடவும், ஏனா, 11 மணிக்கு தலைவர் வருகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.