ரஜினி படத்தில் தினேஷ், கலையரசன் கேரக்டர் தெரியுமா?


ரஜினி படத்தில் தினேஷ், கலையரசன் கேரக்டர் தெரியுமா?

ரஜினிகாந்த் ‘கபாலி’ என்ற புதிய படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, பிரகாஷ்ராஜ், ‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தாணு தயாரிக்கவிருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி படப்பிடிப்பை சென்னையில் துவங்கவிருக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி இருவேடமேற்கிறார் என்றும் ஒன்று தாதா வேடம் என சொல்லப்பட்டது. இதில் ரஜினியின் ஜோடியாக ராதிகா ஆப்தேவும் மகளாக தன்ஷிகாவும் நடிக்கின்றனர். ஆனால் மற்ற கலைஞர்களின் கேரக்டர்கள் தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தினேஷ் மற்றும் கலையரசன் ரஜினியின் மகன்களாக நடிக்கவிருக்கிறார்கள் என தற்போது தெரிய வந்துள்ளது. தினேஷ் நல்ல பையனாக, பெற்றோர் சொல்லை கேட்பவராக நடிக்கிறாராம். ஆனால் கலையரசன் மது, புகை உள்ளிட்ட கெட்ட பழக்கங்கள் உடையவராக நடிக்கிறாராம். இதனால் ரஜினிக்கு நல்ல பெயரும் கெட்ட பெயரும் கிடைப்பது போல் காட்சிகள் இருக்கிறதாம்.