சிவாஜி-ரஜினி-சூர்யா… மூடப்பட்ட சாந்தி தியேட்டரின் முக்கிய அம்சங்கள்.!


சிவாஜி-ரஜினி-சூர்யா… மூடப்பட்ட சாந்தி தியேட்டரின் முக்கிய அம்சங்கள்.!

1961ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட திரையரங்கம் சாந்தி.

அதன்பின்னர் நடிகர் சிவாஜி கணேசன் இந்த தியேட்டரை விலைக்கு வாங்கிக் கொண்டார்.

இதில் பாவ மன்னிப்பு படம் ரிலீஸ் ஆனது. இதுவே இங்கு வெளியான முதல் சிவாஜி கணேசனின் படம்.

‘திரிசூலம்’ படம் இந்த அரங்கில் ஒரு ஆண்டு காலம் ஓடியது.

அதன்பின்னர் கிட்டதட்ட 45 ஆண்டுகளுக்கு பிறகு சாய் சாந்தி என்ற மற்றொரு தியேட்டரும் இந்த வளாகத்தில் கட்டப்பட்டது.

இதில் ரஜினி நடித்த சந்திரமுகி திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே பெரும் சாதனை படைத்தது.

மூன்று காட்சிகளாக 200 நாள்கள் ஓடிய இப்படம் பிறகு ஒரே ஒரு காட்சியாக 800 நாட்களை கடந்து ஓடியது.

சில நாட்களாக சூர்யா நடித்துள்ள 24 படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், வணிக வளாகமாக மாறவுள்ளதால் மூடப்படுகிறது.

அதன்பின்னர் இந்த வணிக வளாகத்தில் 3 சினிமா தியேட்டர்கள் கட்டப்படவிருக்கிறதாம்.

ஆனால் சாந்தி என்ற பெயரே நிலைத்திருக்கும் என்று இதன் உரிமையாளர் நடிகர் பிரபு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.