தல-தளபதி வேடத்தில் அண்ணன்-தம்பி.. அதிரப்போகும் ஆந்திரா…!


தல-தளபதி வேடத்தில் அண்ணன்-தம்பி.. அதிரப்போகும் ஆந்திரா…!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, அரசியலில் நுழைந்த பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

கிட்டதட்ட 10 வருட இடைவெளிக்குப்பின் தற்போது விஜய்யின் கத்தி ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இது இவரது 150வது படமாகும்.

இப்படத்தை இவரது மகன் ராம் சரண் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

கத்தி ரீமேக்கை தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வீரம்’ மற்றும் ‘வேதாளம்’ ஆகிய படங்களும் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது.

இந்த இரண்டு ரீமேக் படங்களிலும், சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ‘ஜில்லா’ இயக்குனர் ஆர்.டி.நேசன் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

தமிழில் தயாரித்த ஏ.எம்.ரத்னமே தெலுங்கிலும் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.