விக்ரமுடன் இணையும் ஜெயம் ரவி படத்தயாரிப்பாளர்..!


விக்ரமுடன் இணையும் ஜெயம் ரவி படத்தயாரிப்பாளர்..!

ஆனந்த் ஷங்கர் இயக்கும் ‘இரு முகன்’ படத்தை தொடர்ந்து திரு இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம். இப்படத்தை எஸ்எஸ்எப் நிறுவனம் தயாரிக்கிறது.

இதனைத் தொடர்ந்து அண்மையில் வெளியான ‘ஈட்டி’ மற்றும் அடுத்த வாரம் ரிலீஸாகவுள்ள ‘மிருதன்’ உள்ளிட்ட படங்களை தயாரிக்கும் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம் எனக் கூறப்படுகிறது.

இப்படத்தை அவர் ஒப்புக்கொள்ள, பின்னணியில் நடந்த சுவாரஸ்ய தகவல் ஒன்று தெரிய வந்துள்ளது. ‘மிருதன்’ படத்தை ஐங்கரன் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படம் தொடர்பாக பேசிக் கொண்டு இருக்கையில் விக்ரம் படம் குறித்து பேச்சும் எழுந்துள்ளது.

அப்போது விக்ரம் படத்தை தயாரிக்க தான் ஆவலாக உள்ளதாக மைக்கேல் ராயப்பன் ஐங்கரன் நிறுவனத்தினரிடம் தெரிவித்துள்ளார். எனவே அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறதாம்.