‘என் உழைப்பு ஏமாற்றியது… ஆனால் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்.’ – விக்ரம்.!


‘என் உழைப்பு ஏமாற்றியது… ஆனால் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்.’ – விக்ரம்.!

சீயான் விக்ரம்… நாம் காணும் பொழுதுபோக்கு சினிமாவிற்காக தன்னையே அர்ப்பணிக்கும் நடிகர் இவர்.

இவரது உழைப்பை சொல்ல பல படங்களை பட்டியல் போடலாம்.

தற்போது நடித்து வரும் இருமுகன் படமும் அவ்வகையான படமே.

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், திருநங்கை வேடத்தில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இதுகுறித்து விக்ரம் தெரிவித்துள்ளதாவது…

“நான் நடிக்கும் சில படங்கள் சீக்கிரம் முடிந்து விடுகின்றன. சில படங்கள் தாமதம் ஆகின்றன.

ஒருசில படங்களுக்காக வருடக்கணக்கில் உழைக்கிறேன். என் முழு உழைப்பையும் கொடுத்த அந்தப்படங்களே என்னை சில சமயம் ஏமாற்றி விடுகின்றன.

இனி நான் நடிக்கும் படங்கள் என் தயாரிப்பாளர்களையும் ரசிகர்களையும் ஏமாற்றாது.

நிறைய படங்களில் நடிக்காமல், நல்ல தரமான படங்களில் நடிக்க காத்திருப்பதால் ஒவ்வொரு படத்திற்கும் நிறைய இடைவெளி வருகிறது” என்றார் விக்ரம்.