கமல்-சூர்யாவை முந்தி, ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய்..!


கமல்-சூர்யாவை முந்தி, ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய்..!

விஜய் நடித்துள்ள தெறி படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியானதை தொடர்ந்து படம் வெளியிட்டுக்கு தயாராகி வருகிறது.

எனவே படத்தின் வியாபாரமும் தற்போது சூடு பிடித்துள்ளது. இதன் அமெரிக்கா வெளியீட்டு உரிமையை சினி கேலக்சி நிறுவனம் ரூ.3 கோடி கொடுத்து பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே நிறுவனம்தான் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் உரிமையையும் பெற்றுள்ளது.

கபாலி படத்தின் உரிமையை ரூ. 8.5 கோடிக்கு கொடுத்துள்ளதாக தயாரிப்பாளர் தாணுவே பொது மேடையில் கூறியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மேலும் இதே நிறுவனம் சூர்யாவின் ‘24’ படத்தை ரூ.2.1 கோடிக்கு பெற்றுள்ளதாம்.

கமலின் ‘உத்தமவில்லனை’ ரூ.2.8 கோடிக்கு பெற்று அமெரிக்காவில் வெளியிட்டதும் இந்த நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.