மெகா கூட்டணி… ரஜினியுடன் இணைந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா..!


மெகா கூட்டணி… ரஜினியுடன் இணைந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா..!

‘3’ என்று பெயரிடப்பட்ட படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த ஐஸ்வர்யா தனுஷ் பின்னர் ‘வை ராஜா வை’ என்ற படத்தையும் இயக்கினார். இந்த இரு படங்களின் திரைக்கதையும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து, எவரும் தொடாத சினிமா ஸ்டண்ட் கலைஞர்களின் கதைக்களத்தை கொண்டு தன் புதிய படத்தை இயக்கவிருப்பதை ஓரிரு தினங்களுக்கு முன்பு நாங்கள் தெரிவித்திருந்தோம் அல்லவா.

தற்போது ‘சினிமா வீரன்’ என்ற பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையங்களில் வெளியாகியுள்ளது. அதில் பிரபல சண்டைப் பயிற்சி கலைஞர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.

வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தனுஷ்  தயாரிக்கிறார். இந்த ஆவணப் படத்தின் வர்ணனை (வாய்ஸ் ஓவர்) சூப்பர் ஸ்டார் ரஜினியின் குரலில் ஒலிக்கக் போகிறதாம். குதுப் ஈ க்ரிபா இசைக் கலைஞர்களுடன் ஏ ஆர் ரஹ்மான் இசை பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார். கவனிக்கிறார்.