ராதிகா சரத்குமார் மகள் நிச்சயதார்த்தத்திற்கு ஜெயலலிதா வாழ்த்து!


ராதிகா சரத்குமார் மகள் நிச்சயதார்த்தத்திற்கு ஜெயலலிதா வாழ்த்து!

நடிகர் சங்கத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோரின் மகள் ரேயானுக்கும், கிரிக்கெட் விளையாட்டு வீரர் அபிமன்யூ மிதுனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் இன்று சென்னையில் நடைபெற்றது. இவர்களின் நிச்சயதார்த்தத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.

இன்று நடைபெற்ற இவ்விழாவில் தமிழ் திரையுலக நட்சத்திரங்களும் அரசியல் கட்சி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் பாக்யராஜ், மோகன், மோகன்ராம். அரவிந்த்சாமி, சாந்தனு, அருண் விஜய், பிரபு, ராம்குமார், ராதாரவி, பிரசன்னா, ராம்கி, சிவகுமார், ஆகியோரும் இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஹரி, கே.எஸ்.ரவிக்குமார், சமுத்திரகனி, பாலாஜி மோகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

நடிகைகள் ஸ்ரீப்ரியா, நளினி, சீமா, சரிதா, சீதா, அம்பிகா, மீனா, ஜோதிகா, குஷ்பூ, வடிவுக்கரசி, நிரோஷா, மகேஸ்வரி சத்யராஜ், காயத்ரி ரகுராம், ஷோபா சந்திரசேகர், லிசி, விஜி, ஜெயபிரபா, சுஹாசினி, ப்ரீத்தா ஹரி, சரண்யா பாக்யராஜ் ஆகியோரும் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.