வடிவேலு இடத்தில் இமான் அண்ணாச்சியா..? சொல்லுங்கண்ணே…!


வடிவேலு இடத்தில் இமான் அண்ணாச்சியா..? சொல்லுங்கண்ணே…!

டிவி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. ரியல் எஸ்டேட் விளம்பரங்களிலும் நடித்து வந்த இவர் தற்போது சினிமாவிலும் தன் கலைச்சேவையை செய்து வருகிறார்.

இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது…

“எனக்கு எப்பொழுதும் திமுகவில் அதிக ஈடுபாடு உண்டு. எனவே இன்று தலைவர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்து இருக்கிறேன். நடைபெறவிருக்கிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்காக பிரசாரம் செய்வேன். தமிழகத்தின் முதல்–அமைச்சராக மீண்டும் கருணாநிதி பதவி ஏற்பார்” என்று கூறினார்.

கடந்த தேர்தலில் திமுகவுக்கு பிரச்சார பீரங்கியாக இருந்தவர் வடிவேலு. ஆனால் திமுக தோல்வி அடைந்த பின்னர் அவர் என்ன ஆனார் என்பது நாம் அறிந்ததே. இப்போது வடிவேலு இடத்தில் இமான் அண்ணாச்சி வந்திருக்கிறார்.

இப்போ சொல்லுங்கண்ணே சொல்லுங்க…