புதிய கூட்டணி: டி.ஆருடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி…!


புதிய கூட்டணி: டி.ஆருடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி…!

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே. வி ஆனந்த் தன் புதிய படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

இப்படத்தில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

அனேகன், தனி ஒருவன் படங்களைத் தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் எவரும் எதிர்பாராத வகையில் இப்படத்தில் டி.ராஜேந்தர் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

இவர் தயாரித்து இயக்கியுள்ள படங்களில் நடித்து வந்த இவர் முதன்முறையாக இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படக்குழுவினர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையங்களில் வெளியாகியுள்ளது.