விஜய்-அஜித்துடன் கனெக்ஷன் ஆகும் விஜய் சேதுபதியின் புதிய படம்..!


விஜய்-அஜித்துடன் கனெக்ஷன் ஆகும் விஜய் சேதுபதியின் புதிய படம்..!

நானும் ரௌடிதான் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் தன் புதிய படத்திற்கு தயாராகி விட்டார்.

இவர் அடுத்த இயக்கவுள்ள படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறாராம். அஜித்தின் ஆரம்பம், வீரம், வேதாளம் ஆகிய மூன்று படங்களை தொடர்ந்து இப்படத்தை ஏஎம் ரத்னம் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இவருடன் நயன்தாரா மற்றும் எமி ஜாக்சன் நடிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற டைட்டில் உறுதியாகியுள்ளது.

வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவிருக்கின்றனர். ஏப்ரல் இறுதியில் இதன் படப்பிடிப்பை துவங்கவுள்ளனர்.

ஏப்ரல் 14ஆம் தேதிதான் விஜய்யின் ‘தெறி’ படம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.