கமலின் ஆஸ்தான இசையமைப்பாளருடன் இணைந்த சி.வி.குமார்..!


கமலின் ஆஸ்தான இசையமைப்பாளருடன் இணைந்த சி.வி.குமார்..!

பிரபல தயாரிப்பாளரான சி.வி. குமார், தனது அடுத்த அவதாரமாக இயக்குனராகுகிறார். ‘பீட்சா’, ‘அட்டகத்தி’, ‘சூதுகவ்வும்’, ‘முண்டாசுபட்டி’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை தனது திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்தவர் இவர்.

இவர் இயக்கவிருக்கும் படத்திற்கு ‘மாயவன்’ என பெயரிட்டுள்ளார்.

கமலின் ஆஸ்தான இயக்குனரான ஜிப்ரான் இசையமைக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் லாவண்யா திரிபாதி இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். இவர்களுடன் டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள், ஜெ பி, மைம் கோபி, பாபு ஆண்டனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.