விஜய்யுடன் மோதும் ரஜினி-கமலின் ‘டெரர்’ வில்லன்கள்…!


விஜய்யுடன் மோதும் ரஜினி-கமலின் ‘டெரர்’ வில்லன்கள்…!

அட்லி இயக்கிய தெறி ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகி விட்டது.

இதனையடுத்து தன் அடுத்த படத்தில் முழுகவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாராம் விஜய்.

எனவே, பரதன் இயக்கத்தில் அடுத்த நடிக்கவுள்ள ‘விஜய் 60′ படத்தின் படப்பிடிப்பை வருகிற 11ஆம் தேதி தொடங்கவிருக்கின்றனர்.

இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், சதீஷ் மற்றும் ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் வில்லன் ஜெகபதிபாபு நடிக்கின்றனர்.

தற்போது மற்றொரு வில்லனும் இப்படத்தில் விஜய்யுடன் மோதவிருக்கிறாராம்.

கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் டெரர் வில்லனாக கலக்கிய டேனியல் பாலாஜி நடிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் தயாரிக்கிறது. சுகுமார் ஒளிப்பதிவு செய்ய ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பை கவனிக்கிறார்.