கமல், அஜித் படங்களை போல் விஜய் படமும் இருக்கும்… டேனியல் பாலாஜி..!


கமல், அஜித் படங்களை போல் விஜய் படமும் இருக்கும்… டேனியல் பாலாஜி..!

விஜய்யின் ‘தெறி’ வெளியாக இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

பரதன் இயக்கவுள்ள இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் நடிப்பது குறித்து டேனியல் பாலாஜி கூறியதாவது…

“கமல் சாரின் வேட்டையாடு விளையாடு படத்தில் எனது வில்லன் கேரக்டர் மிக வித்தியாசமாக அமைந்தது. அதுபோல் அஜித் சாருடன் நடித்த என்னை அறிந்தால் படமும் நல்ல பெயரை தந்தது.

இதுபோல் விஜய் 60 படத்திலும் எனது வித்தியாசமான நடிப்பை பார்க்கலாம். அவருடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி” என்றார்.