எம்.ஜி.ஆர்., ரஜினி நடித்த பங்களாவில் உருவானது ‘டார்லிங்-2’


எம்.ஜி.ஆர்., ரஜினி நடித்த பங்களாவில் உருவானது ‘டார்லிங்-2’

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முதன்முறையாக நாயகனாக நடித்த ‘டார்லிங்’ படம் பெரும் வெற்றி பெற்றது. தற்போது இப்படத்தின் தலைப்பை வேறு ஒரு படத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். அதாவது ‘டார்லிங்-2′ என பெயரிட்டுள்ளனர். சதீஷ் சந்திரசேகரன் இயக்கிய ‘ஜின்’ என்ற படத்தின் தலைப்பே இப்போது டார்லிங் ஆக மாறியுள்ளது.

இப்படம் பற்றி இயக்குனர் கூறியதாவது… ”அமானுஷ்ய சக்திகளை பற்றிய படம் இது. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘அன்பே வா’ மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த ‘தம்பிக்கு எந்த ஊரு’ படங்களில் வந்த பழமையான பங்களாவில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.

ஐந்து நண்பர்களின் வாழ்க்கையில் மூன்று நாட்களில் ஏற்படும் அசாதாரணமான நிகழ்வுகளே படத்தின் திரைக்கதை. இதில் ரமீஷ், கலையரசன், மெட்ராஸ் ஹரி, காளி வெங்கட், அர்ஜுனன், முண்டாசுப்பட்டி முனீஸ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்” என்றார்.

ரமீஸ்ராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் என்ற நிறுவனங்கள் தயாரித்து வந்த இப்படத்தை க்ரீன் ஸ்டுடியோஸ் ஞானவேல்ராஜா வாங்கி வெளியிடுகிறார்.