​பண நெருக்கடி… கடன் பிரச்சினை​ …​ ​அஜித் மனசு வைத்தால் நடக்கும்…’ சிவகார்த்திகேயன்!


​பண நெருக்கடி… கடன் பிரச்சினை​ …​ ​அஜித் மனசு வைத்தால் நடக்கும்…’ சிவகார்த்திகேயன்!

பண நெருக்கடி… கடன் பிரச்சினை… வழக்குகள்… பல கட்ட பேச்சுவார்த்தைகள் என அனைத்தையும் மீறி நாளை முதல் ரசிகர்களுக்கு தரிசனம் தருகிறான் ரஜினிமுருகன்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், சூரி, பொன்ராம், இமான் கூட்டணியில் உருவாகியுள்ள ரஜினிமுருகன் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. உலகம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

இப்படக்குழுவினர் தற்போது படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனிடம் ‘அஜித் படத்தில் நீங்கள் அவரின் தம்பியாக நடிக்கிறீர்களா?’ என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் ‘அவருடன் கண்டிப்பாக நடிப்பேன்., அஜித் மனசு வைத்தால் நடக்கும். ஆனால், அது எப்போது என்றுதான் தெரியவில்லை’ என்று கூறினார்.