நடிகர் சங்கத்தின் நட்சத்திர கிரிக்கெட் வசூல் எவ்வளவு..?


நடிகர் சங்கத்தின் நட்சத்திர கிரிக்கெட் வசூல் எவ்வளவு..?

ரஜினி, கமல், மம்மூட்டி உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் கலந்து கொண்ட நட்சத்திர கிரிக்கெட் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடத்தப்பட்ட இந்த போட்டிக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிப்பரப்பப்பட்டதால், அதன் மூலம் ரூ. 9 கோடி சங்கத்திற்கு கிடைத்துள்ளது.

மொத்தத்தில் இந்த போட்டியின் மூலம் நடிகர் சங்கத்திற்கு ரூ.13 கோடி வசூல் கிடைத்துள்ளதாம்.

நடிகர் சங்க கட்டிடத்தின் மொத்த பட்ஜெட் ரூ.26 கோடி என்பதால், மீதி பணத்தை எப்படி திரட்டப் போகிறார்கள் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.