ஜுனியரின் படத்தில் சீனியருடன் ஜோடி சேரும் தேவயானி..!


ஜுனியரின் படத்தில் சீனியருடன் ஜோடி சேரும் தேவயானி..!

20 வருடங்கள் முன்பு தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தேவயானி. ரஜினிகாந்த் தவிர அனைத்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர் இவர்.

பின்னர் திருமணம், குடும்பம் என சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு டிவி சீரியல்களில் கொடி கட்டினார். தற்போது பிரபல தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறாராம். ஜுனியர் என்டிஆர், மோகன்லால், சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகும் ‘ஜனதா காரேஜ்’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இதில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் தேவயானி.

Related