போலீஸ் கெட்டப்பில் ரஜினிகாந்த் மகள்!


போலீஸ் கெட்டப்பில் ரஜினிகாந்த் மகள்!

பேராண்மை’, ‘பரதேசி’, ‘அரவான்உள்ளிட்ட படங்களில் நடித்து தனி முத்திரை பதித்தவர் தன்ஷிகா.  இவரது நடிப்புக்கு கிடைத்த மகுடமாக தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் ரஜினியின் மகளாக தன்ஷிகா நடிப்பது நாம் அறிந்ததே.

இவர்கள் இருவரும் நடித்த காட்சியை சென்னை விமான நிலையத்தில் சமீபத்தில் படமாக்கினார் இயக்குனர் ரஞ்சித். இதில் தன்ஷிகா போதை பழக்கத்திற்கு அடிமையான பெண்ணாக நடித்து வருகிறார்.

தனிடையில் ‘கபாலி’ படத்தை தொடர்ந்து ‘காத்தாடி‘ படத்தில் நடித்து வருகிறார் தன்ஷிகா.  இவருடன் கார்த்திக், டேனியல், காளி, பேபி சந்தியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பவன் இசையமைத்து வருகிறார்.

கல்யாண் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார் தன்ஷிகா. மேலும் தன் நிஜ வாழ்க்கையில் தற்காப்புக்கலையை பயின்றவர் என்பதால் டூப் இன்றி சில ரிஸ்க்கான காட்சிகளில் நடித்துள்ளாராம் இந்த ‘கபாலி’ மகள்.