தாணுவின் ‘தெறி’க்கும் பிஸினெஸ் ப்ளான்..!


தாணுவின் ‘தெறி’க்கும் பிஸினெஸ் ப்ளான்..!

விஜய்யின் ‘தெறி’ படத்தின் டைட்டில் குறித்து இயக்குனர் அட்லி கூறியதாவது… ‘தெறி’ என்ற டைட்டில் ரசிகர்களுக்கு புது எனர்ஜியை தரும். மேலும் இது கதைக்கு பக்காவாக பொருந்தியுள்ளது.

இது ஒரு ஆக்சன் மற்றும் குடும்ப சென்டிமெண்ட் கலந்த படமாக இருக்கும். படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தாலும் இருவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு ஏற்றவாறு பன்ச் டயலாக்ஸ் மற்றும் விஜய்க்கான மாஸ் காட்சிகளுக்கும் படத்தில் குறைவிருக்காது” என்றார்.

இப்படத்திற்கு பெயரிடப்படுவதற்கு முன்பே படத்தின் வியாபாரத்தை தொடங்கியிருந்தார் தயாரிப்பாளர் தாணு.

தற்போது கர்நாடகத்தில் இதன் ரிலீஸ் உரிமையை கோல்டி பிலிம்ஸ் (Goldie) நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளதாம். இதே நிறுவனம்தான் விஜய்யின் ‘கத்தி’ படத்தையும் கர்நாடகத்தில் வெளியிட்டது.