அனிருத்தான் வேணும்… அடம் பிடிக்கிறாரா தனுஷ்…?


அனிருத்தான் வேணும்… அடம் பிடிக்கிறாரா தனுஷ்…?

தனுஷின் புதிய படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவது உறுதியாகிவிட்டது. இதில் நாயகியாக நடிக்க லட்சுமி மேனனை அணுகலாம் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜின் இந்த யோசனைக்கு தனுஷ் ஓகே சொல்லிவிட்டராம்.

அதுபோல், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனை கமிட் செய்யலாம் என இயக்குனர் சொல்லவே, அதற்கு மறுத்து விட்டாராம் நாயகன்.

அனிருத் பெட்டர் சாய்ஸ் என் தனுஷ் சொன்னாலும், அனிருத் இசை பணிகளை முடிக்க தாமதம் செய்வார் என இயக்குனர் மறுத்துவிட்டாராம்.

இதனால் இந்த பஞ்சாயத்து இன்னும் முடிவுக்கு வரவில்லை என கூறப்படுகிறது.