‘டீ கடை ராஜா’ தனுஷின் ரெகுலர் கஸ்டமர் எமி & சமந்தா!


‘டீ கடை ராஜா’ தனுஷின் ரெகுலர் கஸ்டமர் எமி & சமந்தா!

‘வேலையில்லா பட்டதாரி’ என்ற வெற்றிப் படக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் தனுஷ் ஜோடியாக இரு நாயகிகள் நடிக்கவிருக்கிறார்கள். ஒருவர் எமிஜாக்சன் மற்றொருவர் சமந்தா தாங்கள் அறிந்ததே. இது விஐபி படத்தின் இரண்டாம் பாகம் அல்ல என்பதை படத்தை தயாரிக்கும் தனுஷ் தெரிவித்திருந்தார்.

தனுஷ் சிறிது காலமாகவே ஷேவிங் செய்யாத தாடி முகத்துடனே படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்படத்தில் பக்கா க்ளீன் ஷேவிங் செய்த முகத்துடன் நடித்து வருகிறாராம். (ஒரு வேளை எமி சொல்லியிருப்பாங்களோ) இப்படத்திற்கு இசை தனுஷின் ஆஸ்தான மியூசிக் டைரக்டர் அனிருத்தேதான். மேலும் இவர்களது நட்பு கூட்டணியில் இருக்கும் சதீசும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதுநாள் வரை பெயரிடப்படாமல் வளர்ந்து வரும் இப்படத்திற்கு ஒரு நல்ல பெயர் சொல்ல நாங்கள் சொல்லி இருந்தோம் அல்லவா? தற்போது இப்படத்திற்கு பெயர் ரெடியாகி விட்டதாம். ‘டீ கடை ராஜா’ என பெயிரிட்டுள்ளனர். இதுபற்றிய முறையான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

ஒருவேளை படத்தில் தனுஷ் வைத்திருக்கும் டீ கடையின் ரெகுலர் கஸ்டமரா? இருப்பாங்களோ எமியும் சமந்தாவும். ஆகட்டும்… ஆகட்டும்…