ரஜினி வழியில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தனுஷ்..!


ரஜினி வழியில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தனுஷ்..!

ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது எவரும் கணிக்க முடியாத கூட்டணி காட்சிகள் அரசியல் உலகில் அவ்வப்போது அரங்கேறுவது உண்டு.

தற்போது சினிமாவிலும் இதுபோன்ற எதிர்பாராத கூட்டணிகள் தொடர்கிறது.

எவரும் எதிர்பாராத வகையில் ரஜினி படத்தை ரஞ்சித் இயக்குவதாக அறிவிப்பு கடந்தாண்டு வந்தது. தற்போது இதே போன்ற இன்ப அதிர்ச்சியை தனுஷும் கொடுத்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு, கௌதம்மேனன் இயக்கத்தில் என்னை நோக்கிப் பாயும் தோட்டா படத்தில் நடிப்பதாக அறிவித்தார். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது திடீரென ஜிகர்தண்டா, இறைவி படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்துள்ளார் தனுஷ்.

முக்கிய வேடத்தில் கருணாகரன் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது.