தனுஷ் – கீர்த்தி சுரேஷ் இணைந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது…!


தனுஷ் – கீர்த்தி சுரேஷ் இணைந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது…!

பிரபு சாலமன், தனுஷ் இணைந்த படத்திற்கு பெயரிடாமல் இறுதிக்கட்டப் பணிகளை தொடர்ந்து வருகின்றனர். ரயில், மிரட்டு என பல பெயர்கள் பரிசீலனையில் இருந்து வந்தது.

இந்நிலையில் தொடரி  பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இதனால், வெகுநாட்களாக காத்திருந்த தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

பிரபு சாலமன் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ் உடன், கீர்த்தி சுரேஷ், பூஜா ஜாவேரி, கணேஷ் வெங்கட்ராமன், ஹரீஷ் உத்தமன், ராதாரவி, தம்பி ராமையா, ஆர். வி. உதயகுமார், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.