கபாலி ரிலீஸ் தேதி தெரியாமல் தடுமாறும் தனுஷ்-சிவகார்த்திகேயன்..?


கபாலி ரிலீஸ் தேதி தெரியாமல் தடுமாறும் தனுஷ்-சிவகார்த்திகேயன்..?

நெருப்புடா… கபாலிடா…. என ரஜினியின் கபாலி டீசர் படைத்து வரும் சாதனைகள் அனைவரும் அறிந்ததே.

இப்படத்தின் பாடல்கள் மே மாத இறுதியில் வெளியாகும் என கூறப்பட்டாலும் தேதி அறிவிக்கப்படவில்லை.

அதுபோல் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவிக்கவில்லை. ஜுன் மாதம் இறுதியில் அல்லது ஜுலை 1ஆம் தேதி வெளியாகக்கூடும் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இப்படத்தின் டீசர் ஏற்படுத்திய மாயா ஜாலத்தால், படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இதனால் கபாலி வெளியாகும் வாரத்தில் தங்கள் படங்கள் வெளியானால் முதலுக்கே மோசமாய் அமைந்துவிடும் என்பதால் தனுஷ் சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் தயங்குகிறார்களாம்.

தனுஷின் கொடி மற்றும் தொடரி படங்கள் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளன.

அதுபோல் சிவகார்த்திகேயனின் ரெமோ படமும் அதற்குள் தயாராகிவிடும் என்பதால் இரு தரப்பிலும் கபாலியின் ரிலீஸ் தேதிக்காக வெயிட்டிங் என கூறப்படுகிறது.