ப்ரொடியூசருக்காக தனுஷ், ஆர்யா, சிம்பு செய்த தியாகம்


ப்ரொடியூசருக்காக தனுஷ், ஆர்யா, சிம்பு செய்த தியாகம்

படத்தின் பட்ஜெட் எகிற நடிகர்கள்தான் காரணம் என தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் நடிகர்களின் சம்பளத்தை ஏற்றுபவர்களே அவர்கள் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் குற்றம் சாட்டும் தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட நடிகர்கள் உதவி செய்தால் அதை வெளியில் சொல்வதில்லை.

இந்நிலையில் ஆர்யா நடித்த ‘மீகாமன்’ படம் கடந்த வருடம் இறுதியில் வெளியானது. மகிழ்திருமேனி இயக்கியிருந்த இப்படத்தை நேமிசந்த் ஜெபக் தயாரித்து இருந்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் படம் வருவதற்கு முன்பு சிக்கல் ஏற்பட்டது. அந்தச் சிக்கலைத் தீர்க்க ஆர்யா முன்வந்தார். இதனால் இவருக்கு சுமார் ரூ. 6 முதல் 8 கோடி வரை இழப்பு ஏற்பட்டது.

அதுபோல் தனுஷ் நடித்த ‘மாரி’ படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இப்படம் வெளியாகும் சமயத்தில் தன்னுடைய சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக் கொடுத்தார் தனுஷ். இதனால் இவருக்கு ரூ. 10 கோடி வரை இழப்பு ஏற்பட்டது. பாலாஜி மோகன் இயக்கிய இப்படத்தை ராதிகா மற்றும் சரத்குமார் தயாரித்திருந்தனர்.

அண்மையில் சிம்புவின் ‘வாலு’ படம் வெளியாகும் சமயத்தில் பல பிரச்சினைகளை சந்தித்தது. அறிமுக இயக்குனர் விஜய் சந்தர் இயக்கிய இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரித்திருந்தார். இதனை வெளியிடும் முயற்சியில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் இறங்கி ரூ. 20 கோடி வரை இழப்பை சந்தித்தார். இப்படியாக நம் ஹீரோக்கள் தங்கள் தயாரிப்பாளர்களுக்காக தங்கள் பணத்தை தியாகம் செய்து வருகின்றனர்.