விமல், விஜய் சேதுபதியை வாழ்த்திய தனுஷ்..!


விமல், விஜய் சேதுபதியை வாழ்த்திய தனுஷ்..!

கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் ‘கொடி’ நாட்டிய தனுஷ் விரைவில் ஹாலிவுட் படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

என்னதான் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது ட்விட்டரில் தன் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.

பொதுத் தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு சமீபத்தில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். மகளிர் தினத்திலும் பெண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாளை வெளியாகவுள்ள படங்களின் நாயகர்களுக்கும் வாழ்த்துக்களை தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாளை விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும், விமலின் மாப்ள சிங்கம், கார்த்திக் சுப்புராஜின் அவியல், ரவிச்சந்திரனின் நட்பதிகாரம் 79 உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது.

தனுஷ் தயாரித்து அமலா பால் நடித்துள்ள ‘அம்மா கணக்கு’ படத்தின் பர்ஸ்ட் நாளை வெளியாகவுள்ளது என்பதையும் சற்றுமுன் தனுஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.